பாஜகவுடன் கூட்டணியா? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் முதல் தொடங்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்திருக்கிறார்

பாஜகவுடன் கூட்டணியா? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: December 29, 2018, 10:58 PM IST
  • Share this:
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றதாக கூறப்படும் நிலையில், அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தோழமை பாராட்டி வரும் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதாவது திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியவை கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி நிலவரம் என்னவென தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரின் டெல்லி பயணம், கூட்டணிக்காகவே என்று கூறப்படுகிறது.


ஆனால் இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார். துறை ரீதியான பணிகளுக்காகவே இருவரும் டெல்லி சென்றதாகவும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் முதல் தொடங்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருக்கிறார். திமுக-வை விட வலுவான கூட்டணி அமைப்போம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி-க்கள் அதிகளவில் நாடாளுமன்றம் செல்வார்கள் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால், என அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.Also watch

First published: December 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்