வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர்,
வேலூர்,
ராணிப்பேட்டை,
திருப்பத்தூர்,
திருவண்ணாமலை,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
கிருஷ்ணகிரி மற்றும்
தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என
சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் பற்றிய விவரத்தையும் தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 24 ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 25 (சனிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 26ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். திங்கட்கிழமை (27 ஆம் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) : மேலூர் ( மதுரை ) 7, திருபுவனம் ( சிவகங்கை ), புலிப்பட்டி ( மதுரை ) தலா 6, கலவை ( ராணிப்பேட்டை ) 5, வெம்பக்கோட்டை ( விருதுநகர்) , சேலம், தலா 4, கள்ளக்குறிச்சி , ஏற்காடு ( சேலம் ), வெம்பாக்கம் ( திருவண்ணாமலை ) , காரியாபட்டி ( விருதுநகர் ) தலா 3, கோவில்பட்டி (தூத்துக்குடி) , சிவகங்கை, அரக்கோணம் (ராணிப்பேட்டை) , வேதாரண்யம் (நாகப்பட்டினம்) , ராசிபுரம் ( நாமக்கல்) , தண்டராம்பேட்டை ( திருவண்ணாமலை ) , வைப்பர் (தூத்துக்குடி ) , மானாமதுரை ( சிவகங்கை ), உசிலம்பட்டி (மதுரை ) , திருவாடானை (ராமநாதபுரம் ) தலா 2.
மீனவர்களுக்கான எச்சரிக்கை, 23ஆம் தேதி, சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திர கடல் பகுதிகளில் வீசக்கூடும். 23, 24 ஆகிய தேதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும். 26 மற்றும் 27ஆகிய தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ஆம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் தெறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெறியிட்டுள்ள அறிவிப்பில், மியான்மர் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து வட மேற்கு திசையில் வட கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் இதன்காரணமாக, நாளை மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்த பகுதிகளில் (வங்க கடல்) உருவாகக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா கடற் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்பதால், 25ஆம் தேதி ஒடிசாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : முந்தைய ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்
இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.