தமிழகத்தில் மழை - வானிலை முன்னறிவிப்பு

மழை

செப்டம்பர் 2 ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்.

 • Share this:
  தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கும் பகுதிகளை பற்றிய கணிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் வெளியிட்டுள்ளார்.

  அதன்படி, தென்மேற்கு பருவ காற்று காரணமாக ஆகஸ்ட் 31 செய்வாய்கிழமை, தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  செப்டம்பர் 1ஆம் தேதி புதன் கிழமை, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செப்டம்பர் 2 ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

  செப்டம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஓரிரு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

  செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  Must Read : ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 3, காஞ்சிபுரம், வால்பாறை (கோவை), பூண்டி (திருவள்ளூர்), சோலையாறு (கோவை), பொள்ளாச்சி (கோவை) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் இல்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: