கைலாசா எங்கே? சவால் விட்ட நித்தியானந்தம்

கைலாசா நாட்டின் நாணயங்களை அறிவித்த நித்யானந்தா, மதுரையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளருக்கு கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்துள்ளார். ஆனால் தனது நாட்டைக் கண்டுபிடிக்க முடியுமா என்று மறைமுக சவாலும் விடுத்துள்ளார்.

கைலாசா எங்கே? சவால் விட்ட நித்தியானந்தம்
நித்யானந்தா
  • Share this:
எங்கே இருந்தாலும் கவலையில்லாமல் இருப்பதில் நித்யானந்தாவை யாராலும் வெல்லமுடியாது. கவலையற்ற மனிதரான அவர், தனது நாட்டின் அடுத்தடுத்த உருவாக்கங்களில் களமிறங்கியுள்ளார். பல்வேறு சர்ச்கைகளில் சிக்கி அகமதாபாத் போலீசாரால் குற்றவாளியாக நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார்.  கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அவர் அறிவித்ததும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப் போவதாக வெளிப்படையாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.

கைலாசாவிற்கான நாணயத்தை விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப் போவதாக கூறி, அதன்படியே கால் காசு முதல் 10 பைசா வரையிலான 5 வகையான நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, மதுரையில் இருந்து குமார் என்பவர், கைலாசா நாட்டில் தனது ஓட்டலைத் தொடங்க அனுமதி வேண்டும் என நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார். அதில், மக்களை ஈர்க்க நித்யானந்தா எப்படி புது உத்திகளைக் கையாள்கிறாரோ அதேபோல், தாங்களும் மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை என பல வித புதிய உணவுகளைத் தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.

இவர்களுக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்து தொழில்களும் கைலாசாவில் தொடங்கப்படும் எனவும் நித்யானந்தா கூறியுள்ளார்.

மேலும் படிக்க...கைலாசா நாட்டின் நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா! இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்போவதாக பேச்சு!!கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க மதுரைக்காரருக்கு முன்னுரிமை: நித்தியானந்தா உறுதி

அதேநேரம், தனது நாட்டிற்கு வருகை தரும் மக்களில் திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 ஊர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது வெப் கேமரா சிக்னலை வைத்து கைலாசா எங்கிருக்கிறது என தேடுவார்கள் என்று கூறி தனக்கே உரிய சிரிப்பை நித்யானந்தா உதிர்த்துள்ளார் .

கொரோனாவால் உலகமே பீதியடைந்து ஒடுங்கிக் கிடக்கும் நிலையிலும், கைலாசா நாட்டைப் பற்றி பேசிப் பேசியே பிரபலப்படுத்தி வருகிறார் நித்யானந்தா. கைலாசாவை அவர் கண்ணில் காட்டுவாரா என்பதே இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading