முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எய்ம்ஸ் மருத்துவமனையை யாரோ திருடி சென்று விட்டனர் - எம்.பி மாணிக்கம் தாகூர் கேலி

எய்ம்ஸ் மருத்துவமனையை யாரோ திருடி சென்று விட்டனர் - எம்.பி மாணிக்கம் தாகூர் கேலி

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

தாமும், சு.வெங்கடேசனும் ஒரு மணி நேரமாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி வருகிறோம் என்றும், யாரோ சிலர் மருத்துவமனை கட்டடத்தை திருடிச்சென்று விட்டதாகவும் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய நிலையில், தோப்பூருக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வேலை முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் பல்வேறு துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் மருத்துவமனை கட்டப்படும் தோப்பூர் பகுதிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் சென்றனர். எந்த பணியும் நடைபெறாத அந்த இடத்தின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாணிக்கம் தாகூர், 95 சதவீத பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். தாமும், சு.வெங்கடேசனும் ஒரு மணி நேரமாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி வருகிறோம் என்றும், யாரோ சிலர் மருத்துவமனை கட்டடத்தை திருடிச்சென்று விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

இதையும் வாசிக்க: முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை என கூறியுள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்படாத நிலையில் பணி முடிந்து எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Aiims Madurai, Congress, CPM, JP Nadda, Su venkatesan