தமிழகத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

மழை

அரபிக்கடல் பகுதிகளில், 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.

  • Share this:
    தமிழகத்தில் இம்மாதம் 10ஆம் தேதிவரை எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில், ஆகஸ்ட் 6ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    ஆகஸ்ட் 9 - ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    10 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    வானிலை ஆய்வு மையம்


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

    வால்பாறை (கோவை), சின்னக்கல்லார் (கோவை) தலா 5, ராசிபுரம் (நாமக்கல்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 , சீர்காழி (மயிலாடுதுறை) 3, நடுவட்டம் (நீலகிரி) 2, வாணியம்பாடி (திருப்பத்தூர்), வேலூர் ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ராமகிருஷ்ணராஜூ பேட்டை (திருவள்ளூர்), தம்மம்பட்டி (சேலம்), பெரியாறு (தேனி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பொள்ளாச்சி (கோவை), போளூர் (திருவண்ணாமலை) தலா 1 .

    Must Read : இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... 3ஆவது அலையா? - டாக்டர் அனுராக் அகர்வால் விளக்கம்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    வங்க கடல் பகுதிகளில் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரபிக்கடல் பகுதிகளில், 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: