திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில், 6 ஆம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகின்றது. கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய நேர்காணல், இம்மாதம் 6ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அதேபோல கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.
Must Read: வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இம்மாதம் 8 ஆம் தேதி திங்கட் கிழமை தொடங்குகிறார். சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.