• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் போன்றவற்றை அரசு செயல்படுத்தியுள்ளது.

    அந்தவகையில், குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் எழுந்துள்ளது. இதனிடையே, ரேசன் அட்டையில், குடும்ப தலைவி புகைப்படம் இடம்பெற்றிருப்பவர்கள் தான் உதவித்தொகை பெற தகுதியானோர் என பரவலாக கூறப்படுகிறது.

    Also read: சீரியல் பார்த்த படி இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்: வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு

    இதனால், குடும்ப அட்டையில் உள்ள தங்களது குடும்பத் தலைவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, தங்களது புகைப்படத்தை இடம்பெற வைக்கும் முயற்சியில் குடும்பத் தலைவிகள் இறங்கியுள்ளனர்.

    இதனிடையே, விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.17.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    தகுதியுள்ள அனைவருக்கும், வெளிப்படைத்தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும். பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும். தமிழக நிதிநிலையை விரைவில் சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: