திருச்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை திறக்கப்படுவது எப்போது?

திருச்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை திறக்கப்படுவது எப்போது?

திருச்சியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை

கடந்த வருடத்தில் கொரோனா காரணத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஊழியர்கள் அவர்கள் சொந்த மாநிலத்திற்க்கு சென்றதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

 • Share this:
  முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கடந்த மாதம் முடிவடைந்து திறக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கொரோனா பரவலால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றி தற்போது தெரிந்துகொள்வோம்..

  மேட்டூரிலிருந்து அகண்ட காவிரியாக வரும் காவிரி ஆறு, திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. காவிரி ஆற்றில் அதிக அளவில் வரும் தண்ணீர் காவிரியில் முழுமையாக செல்ல முடியாது என்பதால் முக்கொம்பு பகுதியிலிருந்து கொள்ளிடம் ஆள்ளில் நீரை திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பெரிய அளவிலான ஷட்டர்களுடன் கூடிய அணை உள்ளது. இதன் மீது பாலம் அமைக்கப்பட்டு இருசக்கரம் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தென்னிந்திய நிர்பானத்தின் தந்தை என்று அழைக்கபடும் சர் ஆர்த்தர் காட்டன் என்பவரால் 1836ம் ஆண்டு ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

  இந்நிலையில் கடந்த 2018ம் வருடம் ஆகஸ்ட் மாதம் மேட்டூரில் அதிக அளவில் திறக்கப்பட்ட நீரால் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  150 வருடம் பழமையான ஆங்கிலேயர்களால் கட்டபட்ட பாலமானது 45 மதகுகள் நம்பர் 6 லிருந்து 13வது தூண்கள் என 8 தூண்கள் இடிந்து விழுந்தன.

  2005 மற்றும் 2012ம் ஆண்களில் வெள்ளம் வந்தபோது ஏறத்தாழ விநாடிக்கு 3 லட்சம் கனஅடி அளவுக்கு கொள்ளிடம் அணை வழியாக தண்ணீர் சென்றது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் 8 தூண்கள் உடைந்திருப்பது முறையான பராமரிப்பு இல்லாமலும், காவிரி ஆற்றில் அதிகப்படியாக மணல் அள்ளுவதால் ஏற்பட்ட மண் அரிப்பால் தான் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் இடிந்ததாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

  மேலும் வாத்தலை, சிறுகாம்பூர், குணசீலம், ஆமுர் உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மற்றும் பணிகளுக்கு முக்கொம்பு வழியாக 2 கிலோமீட்டரில் செல்பவர்கள் 30 கிலோமீட்டருக்கு மேல் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

  இதனால் கடந்த 2019ம் வருடம் மார்ச் மாதம் கொள்ளிடத்தின் குறுக்கே பழமையான அணை உடைந்ததால் அதன் அருகிலேயே 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. சரியாக 2 வருடத்தில் அதாவது கடந்த மார்ச் மாதம் இப்பணிகள் நிறைவடையும் எ தெரிவித்தார். ஆனால் ஏப்ரல் மாதம் ஆகியும் இதுவரை பணிகள் முடிவடையாமல் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

  திருச்சியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை


  இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது…

  கடந்த வருடத்தில் கொரோனா காரணத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஊழியர்கள் அவர்கள் சொந்த மாநிலத்திற்wa சென்றதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் 2 மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் அணை கட்டும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முடிக்கப்படவேண்டிய பணியானது தற்போது 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. வரும் ஜீலை மாதத்தில் இப்பணியானது முழுமையாக முடிவடைந்து பொது பயன்பாட்டிற்கு வரும் என்றும், இதற்காக இரவு பகல் பாரமல் 400 ஊழியர்கள், 60 பொறியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், இந்த புதிய அணை திறக்கப்பட்டால் கொள்ளிடம் ஆற்று பாசனத்தை நம்பியுள்ள பல லட்சம் விவாசயிகளுக்கு வரப்பிரசாமாக இருக்கும் என தெரிவித்தார்.

  வெற்றிலை பாக்கு தட்டுடன் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திமுகவினர்!

  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது….

  கொள்ளிடம் அணை உடைந்து 2 வருடத்திற்கு மேல் ஆகியும் பணிகள் முடிவடையாமல் இருப்பதால் விரைந்து பணிகளை முடித்தால் தான் 2 கிலோமீட்டரை கடந்து செல்ல வேண்டிய பள்ளி கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்லாமல் செல்லமுடியும் ஆகையால் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து பணியை முடிவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

  ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ பாஸ் கட்டாயம்! 


  திருச்சி செய்தியாளர் இ.கதிரவன்
  Published by:Arun
  First published: