திமுக ஆட்சிக்கு வந்தாலே சென்னையைச் சிங்காரிக்கிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்: டிடிவி தினகரன் சாடல்

டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வந்தாலே சென்னையைச் சிங்காரிக்கிறோம் கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள் என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

 • Share this:
  சென்னை அரும்பாக்கம் ஆர்கே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக குடிசையில் வசித்து வருகின்றனர். கரையோரம் இருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அபாயகரமான சூழலை தடுக்கும் வகையில், அந்த மக்களை மாற்று குடியிருப்புக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தாலே சென்னையைச் சிங்காரிக்கிறோம் கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள் என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

  Also read: அடுத்த வாரத்திலிருந்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு

  இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மாநகரங்களை அழகுபடுத்துவதாக கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆரம்பித்திருக்கிற இந்த அதிகார அத்துமீறல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தங்களை வளப்படுத்திக் கொள்ள சென்னையைச் சிங்காரிக்கிறோம், கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்? தமிழகத்தில் இனி வேறெங்கும் இதுபோல் நடக்கக்கூடாது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: