அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக, தெடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

  • Share this:
    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஜி.கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை (3-3-2021) புதன் கிழமை நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

    ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகின்றது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர், தேர்வு என மிகவும் முக்கிய பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    அண்ணா அறிவாலையத்தில் திமுக கூட்டணி கட்சியினரிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதேபோல, அதிமுக கூட்டணி கட்சிகளும் தெடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதேபோல தங்கள் கட்சிக்கும் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என, தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருதாகவும் ஆனால், 10 முதல் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின.

    இந்நிலையில், நாளை அதிமுக-தமாகா இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது.

    Must Read: அதிமுக-தேமுதிக இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை என தகவல்

     

    இதற்கிடையே, அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: