சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை போலீஸ் எப்போது கைது செய்யும்? பொதுமக்கள் கேள்வி

அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலின் குடும்ப திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள்தான் சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது.

Web Desk | news18
Updated: September 16, 2019, 10:31 PM IST
சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை போலீஸ் எப்போது கைது செய்யும்? பொதுமக்கள் கேள்வி
ஜெயகோபால் மற்றும் உயிரிழந்த சுபஸ்ரீ
Web Desk | news18
Updated: September 16, 2019, 10:31 PM IST
பேனர் விழுந்ததால், லாரியில் நசுங்கி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலை கைதுசெய்யாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை தனிப்படை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த வியாழக்கிழமை சுபஸ்ரீ பைக்கில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சுபஸ்ரீயின் பின்னால், தண்ணீர் லாரி ஒன்று அதே வேகத்தில் பின்னால் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத வகையில், சாலை தடுப்பில் மின்விளக்கில் கட்டப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ வாகனத்தின் முன்பு விழ, நிலைகுலைந்த சுபஸ்ரீ சாலையில் பைக்குடன் சரிந்தார்.

அப்போது சில மீட்டர் தொலைவில், பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரியை ஓட்டுநர் மனோஜ் நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், சாலையில் விழுந்து கிடந்த சுபஸ்ரீயை லாரியின் முன் சக்கரம் நசுக்கியது. இதில், அவரது இரண்டு கைகளும் முற்றிலும் நசுங்கின. ஒருபக்கம் ஆம்புலன்ஸ் வரவில்லை, மறுபக்கம் வாகன நெருக்கடி. இந்த நிலையில், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் சுபஸ்ரீ உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். சுபஸ்ரீயின் மரணச் செய்தி வேகமாக பரவியது. உடனே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.தி.மு.கவினர் அகற்றினர்.


அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலின் குடும்ப திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள்தான் சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. சி.சி.டி.வி முக்கிய தடயமாக இருந்த போதிலும், பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை.

சம்பவம் நடந்து 4 நாட்களாகியுள்ள நிலையில், தற்போது ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக வழக்கை விசாரித்துவரும் புனித தோமையார் மலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கூறியுள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள காவல்துறை, முதல் தகவல் அறிக்கையில் ஜெயகோபால் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பேனரை பிரிண்ட் செய்த கடைக்கு உடனடியாக சீல்வைத்த நிலையில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது இதுவரையில் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

Loading...

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...