ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியீடு எப்போது?

எதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியீடு எப்போது?

எதற்கும் துணிந்தவனில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது.

 • 1 minute read
 • Last Updated :

  சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் 2022 பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் கடைசி இரு படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் இரண்டும் ஓடிடியில் நேரடியாக வெளியானதால் விரக்தியில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு திரையரங்கில் விருந்து வைக்கப் போகும் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும். பாண்டிராஜ் கிராமத்துப் பின்னணியில் சென்டிமெண்டும் அதற்கு குறையாத ஆக்ஷனும் கலந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் 2022 பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புத்தாண்டையொட்டி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். புதுவருடத்தில் படத்தின் புரமோஷனை தொடங்கும் விதமாக ஜனவரி 1-ம் தேதி டீஸர் வெளியிடப்படலாம் என்கின்றன உள்வட்ட தகவல்கள்.

  எதற்கும் துணிந்தவனில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட இந்த வதந்தியும் ஒரு காரணம். வதந்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெய் பீம் அளவுக்கு வரவேற்பையும், சர்ச்சையையும் எதற்கும் துணிந்தவன் சம்பாதிக்கும் என்பது நிச்சயம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: