Home /News /tamil-nadu /

மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் பிடிஆர்

மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் பிடிஆர்

 பி டி ஆர் பழனிவேல்

பி டி ஆர் பழனிவேல்

மதுரையில் எப்போது மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுகப்பினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் உயர் நவீன தொழில்நுட்ப முறையில்  நூலகம் அமைப்பது தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதலளித்துள்ளார்.

    2021 - 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் பொது விவாதம் துவங்கியது. அப்போது, மதுரையில் எப்போது மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுகப்பினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே கோவையில் மட்டும் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பான ஆய்வுகள் என்பது மேற்கொள்ளப்பட்டது.  மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று அதிமுக கடந்த ஆட்சியில் சொல்லியது. அதே நிலை தான் தற்போதும் உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு  பணிகள் நிச்சயம் தொடங்கப்படும் என்றார்.

    Also Read  : நூறு நாட்களில் 2000 மணி நேரம் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றிவர் முதல்வர் ஸ்டாலின் - திமுக எம்.எல்.ஏ பேச்சு

    தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜகண்ணப்பன், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த நூலகம் புத்தகங்கள் அடங்கிய நூலகமாக இருக்கவேண்டும். வெறும் டிஜிட்டல் நூலகமாக மட்டும் இருந்து விடக்கூடாது  என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2 லட்சம் சதுரஅடி பரப்பில் மிக உயர் தொழில்நுட்பத்துடன் இந்த நூலகம் அமைக்கப்படவுள்ளது. அதில் வரலாற்று புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் இடம் பெற்று இருக்கும். முதலமைச்சரும்  நவீன முறையில் நூலகம் அமைக்க சொல்லி இருக்கிறார்.

    அதன்படி அனைத்து விதமான உயர் தொழில்நுட்ப முறையில் நூலகம் அமைக்கப்படுகிறது. இதில் புத்தகங்களோடு இதுவரை இல்லாத வெர்ச்சுவல் ரியாலிட்டி, மல்டிமீடியா போன்ற வசதிகளும் இ-புத்தகங்களும் இடம் பெற்று இருக்கும் என்றார். எனவே அவரவருக்கு ஏற்றது போல படிக்கலாம். இவ்வளவு பெரிய நூலகத்தை ஏன் இ-புத்தகங்களுக்காக மட்டும் கட்டவேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, TN Assembly

    அடுத்த செய்தி