முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''யாழ்ப்பாணம் விமான நிலையம்.. தயாராகும் துறைமுகம்..'' இலங்கை குறித்து தகவல்களை அடுக்கிய அண்ணாமலை!

''யாழ்ப்பாணம் விமான நிலையம்.. தயாராகும் துறைமுகம்..'' இலங்கை குறித்து தகவல்களை அடுக்கிய அண்ணாமலை!

அண்ணாமலை

அண்ணாமலை

இலங்கையில் 13 வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன் என அண்ணாமலை பேட்டி.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச ஆரம்பித்தால், அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் குவியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பாலவாக்கம் கடற்கரையில், சுவாசம் என்ற பசுமை முன்னெடுப்பை அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதில், மாணவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு சுமார் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தோல்வி பயம் காரணமாக திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருப்பதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், இலங்கையில் 13 வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். இலங்கை மீனவர்கள் பிரச்சனையில் பாஜக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. நான் இலங்கை செல்ல இருப்பதால் எங்கள் கட்சி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார்.

இடைத்தேர்தல் குறித்து முதல்வர் பயத்தில் உள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினரை ஈரோட்டிற்கு வர வழைத்துள்ளார். எங்களுடைய பிரச்சார பீரங்கியே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான். அவர் பேச ஆரம்பித்தால் எங்களுக்கு ஓட்டு தானாக வரும். பிப்ரவரிக்கு நான்காம் தேதி இலங்கையின் சுதந்திர தின விழா. இலங்கை அரசு மூன்று இடத்தில் கொண்டாடியது. வருகின்ற 11ம் தேதி ஜப்னாவில் கொண்டாட உள்ளனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடைசியாக 2014ஆம் ஆண்டு சென்றபோது ஜப்னாவிர்க்கு இலங்கை தமிழர்களின் கலாச்சார மையத்திற்காக நாம் நிதி கொடுத்து அதை யாழ்ப்பாணத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்தில் அது போன்ற கலாச்சாரம் இருக்காது தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஒரு மையம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனுடைய திறப்பு விழா வருகின்ற 11ஆம் தேதி இலங்கையின் பிரதமர் ரனில் விக்ரம் சிங் துவக்கி வைக்கிறார். அதற்கு மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் முருகன் கலந்து கொள்கிறார்.

அதேபோல் இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகள் அழைப்பை நேற்று மத்திய அமைச்சருடன் நானும் ஜபனாவிற்கு பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணத்தின் போது அங்குள்ள கட்சிகளுடன் இணைந்து சில விஷயங்களை பேச உள்ளோம். இலங்கையில் இருக்கக்கூடிய வடக்கிழங்கு தமிழ் கட்சிகள் அனைவருமே இந்த கோரிக்கையை பொறுத்த வரை ஒன்றாக இருக்கிறார்கள். அதே போல் மத்திய இணை அமைச்சர்கள் அவர்கள் இலங்கையில் உள்ள 118 படகுகள் அங்கு உள்ளது. அந்த படகுகளை விரைந்து விடுவிக்க பேச உள்ளார். மீன்வளத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துள்ளார்.

அதேபோல காலம் காலமாக இருக்கக்கூடிய மீனவர்கள் பிரச்சனை போர்க்களல் அடிப்படையில் 2014 பிறகு எப்படி நமது அரசு வேகமாக விரைந்து செயல்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை கொண்டு வருகிறோம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்டரில் 2011 க்கு பிறகு துப்பாக்கி சூடுகள் கடமையாக குறைந்துள்ளது என பல பத்திரிகைகளில் தொகுப்பு பக்கம் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் பேச்சை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களாக நாங்கள் அதை செய்கிறோம்., இது செய்கிறோம்., என்று காலம் காலமாக செய்கிறார்கள்.

கடந்த 1.5 வருட காலங்களில் 2.1 மில்லியன் டாலருக்கு மேல் இலங்கைக்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. தமிழர்கள் பாதிக்கப்பட கூடாது பொருளாதாரம் பிரச்சனையில் எந்தவித பிரச்சனைகளும் வரக்கூடாது என்பதற்காக வடகிழக்கு பகுதிகள் மலையக தமிழர்களுக்காக நல்ல விஷயங்களை அரசு செய்துள்ளது 60,000 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

நாம் செல்லுகின்ற விமானம் ஜப்னாவில் தரை இறக்குகிறார்கள். அந்த விமான நிலையத்தை கட்டிக் கொடுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இல்லையென்றால் காரில் சென்று கொழும்பு செல்ல எட்டு மணி நேரம் ஆகும். சென்னைக்கும் ஜப்பனாவுக்கும் கலாச்சார அடிப்படையில் ஒரு விமான சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதை ஏற்றுக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக முதல்முறையாக சென்னையில் இருந்து ஜப்னாவிற்கு விமான சேவையும் ஆரம்பித்துள்ளது அந்த விமானத்தில் தான் நாங்கள் செல்ல உள்ளோம்.

அதிகம் நபர்கள் கப்பலில் செல்ல ஆசைப்படுவார்கள். அதற்காகவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதுவும் வேகமாக துறைமுகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான நிதியும் பாரத பிரதமர் வழங்கி உள்ளார். விரைவில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் ஒரு கப்பல் சேவை தொடங்க உள்ளது. இங்குள்ள கட்சிகள் வெறும் வாய்சாவடல்கள் மட்டும் விடுகிறார்கள். கொழும்பு ஜப்னாக்கான ரயில்வே அமைக்க அதற்கும் ஆறு மாதத்திற்கு முன்பு ரயில் சேவை தொடங்குகிறது. அதற்கான நிதியும் இந்திய அரசு வழங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு இன்று மாலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் உள்ளது. இபிஎஸ் அவர்கள் அழைத்திருந்தார்கள் தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் அழைத்து இருந்தார்கள் இன்று இலங்கை செல்லும் காரணத்தினால் கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கட்சி சார்பில் பங்கேற்பார்.

வருகின்ற காலத்தில் அனைவரும் மிக மிக தீர்க்கமாக அனைவரின் உயிரை கொடுத்து பாடுபட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற உறுதியாக வேலை செய்வோம். பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு அன்று பார்ப்பீர்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி வேட்பாளராக மாறி வருவார் என்பதில் எந்த ஒரு சின்ன கடுகளவு கூட சந்தேகம் இல்லை.

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்து ஆதரவு கேட்டு சென்றுள்ளார். பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நானும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன்.

அதிமுக தேதி அறிவிக்க வேண்டும் நான் அதேபோல் கர்நாடகாவின் தேர்தல் அங்கு நடைபெற உள்ளது. என்னையும் கர்நாடகா மாநிலம் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். அங்கு சூடு பிடிக்க ஆரம்பித்ததால் அங்கும் செல்ல வேண்டும். முதல் முன்னுரிமை ஈரோடு கிழக்கில் அதிமுகவை ஜெயிக்க வைப்பது தான். ஒரு கூட்டணி தர்மத்தின் படி கட்சி வேட்பாளர் களம் இறக்கி உள்ளோம் ஜெயிக்க வைப்பது நம்மளுடைய பொறுப்பு. தார்மீக கடமை அது. அதை பாரதிய ஜனதா கட்சி செய்யும் என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Annamalai, Congress, Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan