Home /News /tamil-nadu /

டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

மாதிரி படம்

மாதிரி படம்

நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திருச்சி, சேலம், மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட பொது மேலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர், மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது என்றும், கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கடைகள் மூட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அடிப்படையில் 84 கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 1599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன அவற்றில் 933பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    அதேப்போல் இனிவரும் காலங்களில் புகார்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், இந்நிலையில் நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடுவார்.

    Also Read : அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு - அவகாசம் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

    தொடர்ந்து பேசிய அவர், இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யவில்லை, நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட பேசுவதில்லை என்றும், இனிவரும் காலங்களில் இலக்கு நிர்ணயம் இருக்காது என்றும் கூறினார்.

    நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ் அப் குழுவினை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Senthil Balaji, Tasmac

    அடுத்த செய்தி