Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசிடம் திமுக கேட்கும் போது பாஜகவும் சேர்ந்து தமிழகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசிடம் திமுக கேட்கும் போது பாஜகவும் சேர்ந்து தமிழகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 173, 178 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரமணி சோழமன்னன் தெரு, மற்றும் எல்பி சாலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "வீடுகள் தோறும்,  வீதிகள் தோறும் வாக்கு கேட்டு வருகிறோம். 9 மாத திமுக ஆட்சியில் கழ கஆட்சி ஆற்றியிருக்கும் செயல்பாடுகளை மக்கள் மிகப் பெரிய அளவில் அங்கீகாரத்தை தந்து வேட்பாளரை ஆதரித்து வருகின்றனர். நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என கள நிலவரம் மிகத் தெளிவாக உள்ளது", என்றார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலிலும் வரும் என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு முதலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

மேலும், சட்டப்பேரவை முடக்கப்பட்டது உண்மை என்று மேற்கு வங்க மாநில ஆளுநரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதை பார்க்காமல் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என எண்ணுகிறேன்.

மத்திய அரசை வேண்டுமென்றே எந்த சூழலிலும் திமுக குறை கூறாது. குறை கூறும் வகையில் நடந்துகொண்டால் கண்டிப்பாக குறை சொல்லும் அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை என்ற அவர், மக்கள் நலத்திட்டங்களை, தமிழகத்தின் தேவைகளை புறக்கணிக்கின்ற போது குறை சொல்ல வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக ஆகிறது எனவும், அதை குறை என எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழகத்தின் தேவைகளை திமுக கேட்கும் போது அதனுடன் சேர்ந்து தமிழகத்திற்காக பாஜகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Also read... தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணமே வசூலிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்!

மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கைகளில் மத்திய அரசு தமிழக அரசுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை அண்ணாமேலையே சொன்னால் குறை இருக்கிறதா? நிறை இருக்கிறதா? என்பது தெரியும் என்றார்.

மேலும், திமுக அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கு, அல்வா தயாரிக்கும் ஊருக்கு பக்கத்தில் இருப்பதால் அதுபோல கூறியிருப்பார். நீரையே ஆவியாகாமல் தடுப்பதற்கு தெர்மாகோலை பயன்படுத்தியவர் அவர் அல்வாவை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார் என நகைச்சுவையாக பதிலளித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Ma.Subramanian

அடுத்த செய்தி