Home /News /tamil-nadu /

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உணவு பொருள் விலையேற்றம் குறைவு - ஜெயரஞ்சன்..!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உணவு பொருள் விலையேற்றம் குறைவு - ஜெயரஞ்சன்..!

ஜெயரஞ்சன்

ஜெயரஞ்சன்

விலைவாசி ஏற்றம், ஏழைகளை அதிகம் பாதிக்கும். வருமானத்தில் 70 சதவீதம் உணவுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படும். விலைவாசி ஏறும்போது சாப்பிடுவதை குறைப்பர். அத்தகைய நிலை வராமல் இருக்க, அரசின் திட்டம் பயனுள்ளதாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]



     மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், தமிழகத்தில் தான் மிகக் குறைவாக உள்ளது என, தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர், மத்திய அரசின் புள்ளியியல் துறை சார்பில், மாநிலங்களில் நுகர்வோருக்கான விலைவாசி உயர்வு தொடர்பாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


    அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில், உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் மிகக் குறைவாக உள்ளது. இந்திய அளவில் விலைவாசி ஏற்றம், ஆகஸ்ட் மாதத்தில் 7.6 சதவீதம்; தானியங்கள் விலை ஏற்றம் 9.6 சதவீதம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவற்றில், உணவுப் பொருட்கள் விலையேற்றம், 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது’ என தெரிவித்தார். 


    மேலும், இதற்கு காரணம், பொது வினியோகம் சிறப்பாக செயல்படுவது தான். தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் 3.3 சதவீதம்; உணவு தானியங்கள் விலை ஏற்றம், 2.7 சதவீதமாக உள்ளது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், இலக்கு சார்ந்த பொது வினியோகம் உள்ளது. தமிழகத்தில் மட்டும் எல்லாருக்குமான பொது வினியோகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.






    தமிழகத்தில் சிறப்பு பொது வினியோக திட்டத்தில், 1 லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்குகிறோம். இது உணவுப் பொருட்களுக்கான செலவை கணிசமாக குறைக்கிறது. துவரம் பருப்பு 5 மடங்கு விலை குறைவாக, பாமாயில் ஆறு மடங்கு விலை குறைவாக வழங்கப்படுகிறது. இதற்கு, அரசு பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

    ALSO READ | தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி- காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    சிறப்பு பொது வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாங்கும் உணவுப் பொருட்களில், 63 சதவீதம் பொது வினியோகத்திலும், முன்னுரிமை அட்டைதாரர்கள் வாங்கும் உணவுப் பொருட்களில், 50 முதல் 60 சதவீதம் பொது வினியோக அரிசியையும் பயன்படுத்துகின்றனர்.  விலைவாசி ஏற்றம், ஏழைகளை அதிகம் பாதிக்கும். வருமானத்தில் 70 சதவீதம் உணவுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படும். விலைவாசி ஏறும்போது சாப்பிடுவதை குறைப்பர். அத்தகைய நிலை வராமல் இருக்க, அரசின் திட்டம் பயனுள்ளதாக உள்ளது. தேசிய அளவில் விலைவாசி ஏற்றம் 9 சதவீதமாக உள்ளது; தமிழகத்தில் 5 சதவீதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Food, Tamilnadu

    அடுத்த செய்தி