Home /News /tamil-nadu /

கிடுகிடுவென உயரும் விலைவாசி: சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை அதிகரிப்பு!

கிடுகிடுவென உயரும் விலைவாசி: சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை அதிகரிப்பு!

கிடுகிடுவென உயரும் விலைவாசி: சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை அதிகரிப்பு!

கிடுகிடுவென உயரும் விலைவாசி: சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை அதிகரிப்பு!

விலை அதிகரிப்பால் 10 கிலோ கோதுமை வாங்கவேண்டிய இடத்தில், வெறும் 2, 3 கிலோவை மட்டுமே வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்வதாக கூறுகின்றனர்.

    சென்னை கோயம்பேட்டில், கோதுமை வரத்து குறைவால் அதன் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

    காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக வடமாநிலங்களில் கோதுமை உற்பத்தி மற்றும் இருப்பு குறைந்ததால், வரலாறு காணாத வகையில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போர் நிகழ்ந்ததால், சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையானது, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன் காரணமாக கோதுமையின் சராசரி விலை கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும், ஏப்ரல் மாதம் அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில், ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.24ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.36 ஆக அதிகரித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதே, தற்போதைய விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் எனக்கூறும் வியாபாரிகள், விலை அதிகரிப்பால் 10 கிலோ கோதுமை வாங்கவேண்டிய இடத்தில், வெறும் 2, 3 கிலோவை மட்டுமே வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்வதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: பிரதமர் இல்லத்திற்கே தீ வைப்பு... இரக்கம் காட்டக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மைதா, ரவை, அரிசியின் விலையும் படிப்படியாக அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு ரூ.27-க்கு விற்கப்பட்ட மைதா, தற்போது ரூ.39 வரை அதிகரித்திருக்கிறது. ரவை விலையும் 40 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்து கிலோ ரூ.37 ஆகியுள்ளது. பொன்னி அரிசி கிலோ ரூ.47-ஐ எட்டியுள்ளது. பாஸ்மதி அரிசி 5 ஆண்டுகளில் கிலோவுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.82 ஆகியுள்ளது. 

    100 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு கூறினாலும், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தமிழ்நாட்டிற்கு கோதுமை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

    வரும் காலங்களில், அத்தியாவசிய தேவையான அரிசி, கோதுமை விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர்கள்: கன்னியப்பன், சுசித்ரா.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Wheat

    அடுத்த செய்தி