வாட்ஸ் அப்-க்கு வந்த ஆபாச வீடியோ - தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி போலீசில் புகார்

தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனர் வீரலட்சுமி போலீசில் புகாரளித்துள்ளார்.

 • Share this:
  தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனர் வீரலட்சுமி கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி சார்பாக பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை மை இந்தியா கட்சியின் சார்பாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் இவர் பரங்கிமலை துணை கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

  அதில் கடந்த 17-ம் தேதி மை இந்தியா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வீட்டுக்குச் சென்ற போது தனக்கு ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் அருவருக்கத்தக்க ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் தெரிவித்திருக்கும் வீரலட்சுமி, இது போன்ற வீடியோக்களை அனுப்பி என் மொபைல் எண்ணிற்கு அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தி தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்த நபரை உடனடியாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  மேலும் மூன்று நாட்களில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபரைக் கண்டுபிடித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே கண்டுபிடித்து அந்த நபருக்கு தண்டனை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மர்ம நபரின் வாட்ஸ் அப் தொலைபேசி எண் வைத்து அந்த நபர் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
  Published by:Sheik Hanifah
  First published: