வாட்ஸ்அப்பில் ஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு - தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது

வாட்ஸ்அப்பில் ஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு - தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது
  • Share this:
வாட்ஸ் அப் மூலம் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்த திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் ஒருவர் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் அருண். பி இ பட்டதாரியான இவர், ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நகை, புடவைகள் விற்பவர் போல் வாட்ஸ் குரூப்களை உருவாக்கி அதில் சிலரை இணைத்துள்ளார். இந்த இணைப்பில் பெண்களும் இணைந்துள்ளனர்.


ஒருகட்டத்தில் குரூப்பில் உள்ள அழகான பெண்களின் புகைப்படங்களை பார்த்து, அவர்களுக்கு ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பியுள்ளார். மேலும், பாலியல் உறவுக்கும் அவர் அழைத்துள்ளார்.

வெவ்வேறு எண்கள் மூலம் பெண்களுக்கு மாணிக்கம் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கூறியுள்ளனர்.

இதையடுத்து விசாரணை தொடங்கிய சைபர் கிரைம் போலீசார், மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்