Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இருந்த அறிகுறி என்ன? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இருந்த அறிகுறி என்ன? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இருந்த அறிகுறி என்ன? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இருந்த அறிகுறி என்ன? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் தற்போது வரை 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கண்டறியப்பட்ட அறிகுறிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களின் 57 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரிகளின் முடிவுகள் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியின் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சோதனைக்கு அனுப்பப்பட்ட 57 மாதிரிகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 பேரின் மாதிரி முடிவுகள் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களில் 18 வயதுக்கு கீழான இருவர் தவிர எஞ்சிய ஒமைக்ரான் தொற்றாளர் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அனைவருக்கும் அறிகுறியற்ற நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் லேசான தலைவலி , தலைசுற்றல், தொண்டை அடைப்பு மட்டும் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 33 பேரில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேர் மற்றும் சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Also Read : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று அவசர ஆலோசனை

    இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், டெல்லியில் 54 பேருக்கும், தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்கரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி