Home /News /tamil-nadu /

வெள்ள பாதிப்பு: 2015ல் இருந்து என்ன செய்றீங்க... சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

வெள்ள பாதிப்பு: 2015ல் இருந்து என்ன செய்றீங்க... சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிப்பதாக தெரிவித்தனர்

    மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2015 ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிப்பதாக தெரிவித்தனர்.

    2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது மாநகராட்சி தரப்பு என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் எனவும் எச்சரித்தனர்.

    இதையும் படிங்க: கொரோனா பாதித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி: தமிழக அரசு தகவல்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai flood, Chennai High court, Chennai Rain

    அடுத்த செய்தி