• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியாக பேசியுள்ளார்: டிடிவி தினகரன்!

சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியாக பேசியுள்ளார்: டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர். சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சரியாகவே பேசியுள்ளார். இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

  • Share this:
    சசிகலா தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே பேசியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஓபிஎஸ் எப்போது நிதானமாக பேசுபவர் என்றும் அவர் தெரிவித்தார்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் T.கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று தஞ்சை அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் வி.கே.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் தஞ்சையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள டிடிவி.தினகரன் அங்கு வைக்கப்பட்டுள்ள மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர், சரியாக பேசியுள்ளார்.

    சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சரியாகவே பேசியுள்ளார். இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், மருது சகோதரர்கள் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு - சசிகலா பங்கேற்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: