அதிமுக பொதுசெயலாளராக இருந்த
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து
சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அ
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அ திகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இருவருக்குமான அதிகார போட்டி நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்தது. இந்நிலையில் காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி பயணிப்பது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.
தற்போதைய சூழலில் கூட்டு தலைமையே அதிமுகவுக்கு தேவை எனவும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவால் எந்த பயனும் இல்லை என கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்.
Also Read : ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது: அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது- பிரேமலதா விஜயகாந்த்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததோடு, தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதாவது 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து சட்ட திருத்தம் மேற்கொள்வதோடு அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்தில் பெற வேண்டி உள்ளது. இதற்கிடையில் கட்சியின் பெயரும் சின்னமும் ஓ.பன்னீர்செல்வம் அணியிடம் இருப்பதால் ஒற்றைத்தலைமை என்பது தற்போதய காலத்தில் சாத்தியமில்லை என்பதும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.