• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய என்ன காரணம்?

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய என்ன காரணம்?

UPSC

UPSC

ஆய்ந்தறியும் வகையிலான கற்பித்தல் முறை நமது பள்ளிக்கல்வியில் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

  • Share this:
நாட்டின் மிகப்பெரும் அதிகாரிகளை உருவாக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், தமிழகம் அதன் இருப்பை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நாடு முழுவதும் உயரதிகாரிகளை தேர்வு செய்வதற்கான குடிமைப்பணிகள் தேர்வில், தமிழகத்தில் இருந்து ஐந்து முதல் ஏழு சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.

அதன்படி 2014-ம் ஆண்டில், 1,236 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்திலிருந்து 10 சதவீதத்தினர் அதாவது 118 பேர் மட்டுமே தேர்வாகினர். 2015-ம் ஆண்டில், மொத்த பணியிடங்களான 1,078-ல் 8 சதவீதமான 82 பேர் தேர்வாகினர்.  இதனைத்தொடர்ந்து 2016ல் தேர்ச்சி சதவீதம் 7 ஆக குறைந்ததை அடுத்து, 2017-ல் மேலும் குறைந்து நான்கு சதவீதமானது. அடுத்த ஆண்டான 2018-ல் தேர்ச்சி விகிதம் 5 சதவீதமாக சற்றே அதிகரித்தபோதும் 39 பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வாகினர்.

அதன்பின்னர் 2019ல் மீண்டும் சற்று அதிகரித்து தேர்ச்சி விகிதம் 7 சதவீதமானது.  ஆனால், 2020ல் மொத்தமுள்ள 761 பணியிடங்களில் 36 பேர் மட்டுமே தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளனர்.

Also Read:  காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு – கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?

தேர்ச்சி குறைய காரணம்?

தமிழகத்தில் இருந்து குறைவானவர்கள் தேர்வாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியளித்தல் மிகப்பெரும் சந்தையாக மாறி இருப்பதால், அளவுக்கு அதிகமான தேர்வர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி கிடைக்காமல் போவதாக கருதப்படுகிறது.

 

ஆய்ந்தறியும் வகையிலான கற்பித்தல் முறை நமது பள்ளிக்கல்வியில் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால் போட்டித்தேர்வுகளுக்கான முன்னோட்டம் நமது மாணவர்களுக்கு இல்லாமல் போயிருப்பதாகவும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Also Read:  தென்காசி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த சண்முகவள்ளி!

 

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படாததும் தென்னிந்திய மாணவர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தமிழ் மொழியில் தேர்வெழுத விரும்புபவர்களுக்கு போதிய புத்தகங்கள் இல்லாததும், மதிப்பீட்டாளர்கள் முறையாக இல்லாததும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

 

ஆண்டுவாரியாக மொத்த பணியிடங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து தேர்வானோர்..

2014 : மொத்தம் - 1236 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 118 (10%)

2015 : மொத்தம் - 1078 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 82 (8%)

2016 : மொத்தம் - 1099 தமிழக மாணவர்கள் தேர்ச்சி 78 (7%)

2017 : மொத்தம் - 990 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 42 (4%)

2018 : மொத்தம் - 759 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 39 (5%)

2019 : மொத்தம் - 829 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 60 (7%)

2020 : மொத்தம் - 761 - தமிழக மாணவர்கள் தேர்ச்சி 36 (4.7%)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: