கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் குறைவதற்கு காரணம் என்ன?

கோப்புப் படம்

அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

  • Share this:
அனைவருக்கும் கட்டாய  கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ்  ஒதுக்கப்படும் இடங்கள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. கடந்த 3 அண்டுகளில் 1,24,000லிருந்து 1,07,000ஆக சரிவடைந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் உள்ள நலிந்த பிரிவினருக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LkG  வகுப்பில் முதல் 8-ம் வகுப்புவரை சேர 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

8 ம் வகுப்பு வரை இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் இலவசமாக பயிலலாம். மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும்  குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

Also read: மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

2019ஆம் ஆண்டில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் 1,24,859 ஆக இருந்தது. 2020ம் ஆண்டு 1,15,771 ஆக குறைந்தது. நடப்பாண்டில் 1,07,992 ஆக மேலும் சரிந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ்  மாணவர் சேர்க்கைகான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அல்லது ஆரம்பநிலை வகுப்பிற்கு ஒதுக்கப்படும் மொத்த இடங்களின்  எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக ஆர்டிஇ இடங்கள் குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்ப்படுத்தி தரக்கூடிய திட்டத்தில் இடங்கள் குறைவது வரும் ஆண்டுகளில் ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
Published by:Esakki Raja
First published: