Home /News /tamil-nadu /

பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

பேரறிவாளன் விடுதலை விவகாரம்:  உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

Perarivalan: மாநில அமைச்சரவையின் தீர்மானம், முடிவுகள் பற்றி ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும். குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அரசியல் சாசனத்தில் இடமில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    பேரறிவாளன் விவகாரத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

    பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என கடந்த முறை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் ஒவ்வொரு முறையும், ஒரு காரணம் சொல்லி வருகிறார் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டனர். இதையடுத்து, பேரறிவாளன் தரப்பு வாதத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    Must Read : மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

    தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை குறித்து, அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முடிவெடுத்து குடியுரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். ஆளுநர் முடிவெடுப்பது குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சரவையின் தீர்மானம், முடிவுகள் பற்றி ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும். குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அரசியல் சாசனத்தில் இடமில்லை. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முடிவெடுத்து குடியுரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்பது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

    குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவு, நீதிமறத்தின் முடிவை பாதிக்காது. 30 வருடங்கள் சிறை தண்டனை முடிந்த நிலையில், பேரறிவாளன் நடத்தையில் பிரச்சனை இல்லை. பேரறிவாளன் விவகாரத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? ஒருவர் மீது மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Perarivalan, Supreme court

    அடுத்த செய்தி