முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் இலவச சிகிச்சை பெற என்ன திட்டம் உள்ளது? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்

இதுவரை சுமார் ஒரு கோடியே 58 லட்சம் பேர், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்களுக்கு, தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவதற்காக என்ன திட்டம் உள்ளதென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  கொரோனா தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை அளிக்கக்கோரி கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

  இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு, இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்தது.

  சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சதவீத படுக்கைகள் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இதுவரை சுமார் ஒரு கோடியே 58 லட்சம் பேர், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  Also Read : தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு விகிதமும் குறைவு

  இதனைதொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்றவர்கள், குழு காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் அதிகம் சேர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

  மேலும் இத்திட்டத்தில் சேராதவர்களும், படுக்கை பெற இயலாதவர்களும், தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை பெற முடியும் என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
  Published by:Vijay R
  First published: