தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு. விவரங்கள் இதோ!!

அரசுப்பள்ளி மாணவர்கள் - மாதிரி படம்

தரமான கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அளிப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தொழிற்கல்வியில்  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்குள்  இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க நீதியரசர் முருகேசன் குழு  பரிந்துரைத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

  மருத்துவபடிப்பை போலவே தொழிற்கல்வியிலும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  தொழிற்கல்வி படிப்புகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை,  சட்டம் போன்ற படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்த அளவில்  இருப்பதால், அதனை  சரிசெய்திட டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற  நீதிபதி  முருகேசன்  தலைமையில் குழுவை தமிழக அரசு  அமைத்தது. கடந்த  20-ந் தேதி இந்த குழு தமிழக அரசிடம் அறிக்கையை வழங்கியது.

  Also Read:  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000; ஆட்சிக்கு வந்து 75 நாட்களாகியும் அறிவிக்காதது ஏமாற்றம்: கமல்ஹாசன்

  அந்த அறிக்கையில்,  அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலும்  அவர்களின் பெற்றோர்கள். பெரும்பாலோனோர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதுதும்.இதனால். தங்களின் குழந்தைகளின்  கல்வி  குறித்த எவ்வித விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தெரியவருகிறது.

  அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சுருக்கமாக... 

  *  மாணவர்களுக்கு  பள்ளிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Also Read:  ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

  * அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் செய்தல் வேண்டும்.

  * தரமான கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அளிப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  * மேலும்,  சமூகப் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்கும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 10 சதவீதத்திற்குள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என  பரிந்துரைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  செய்தியாளர் கீதன் சர்ச்ஹில், ஹரூர்
  Published by:Arun
  First published: