ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு? - புருவங்களை உயர்த்திய நாம் தமிழர்!

கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு? - புருவங்களை உயர்த்திய நாம் தமிழர்!

வாக்கு சதவிகிதம்:

வாக்கு சதவிகிதம்:

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் உள்ள 234 இடங்களில் 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த தமிழக சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக நடைபெற்று முடிந்து முடிவுகளும் வெளியாகி விட்டன. அறுதிப் பெறும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் மே 7ம் தேதி பதவியேற்க உள்ளார்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் கட்சிகள் பெற்ற தொகுதிகள், வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் உள்ள 234 இடங்களில் 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது..

திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

திமுக - 125

காங்கிரஸ் - 18

விசிக - 4

மதிமுக - 4

சிபிஎம் - 2

சிபிஐ - 2

பிற கட்சிகள் - 4

அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது...

திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

அதிமுக - 65

பாமக - 5

பாஜக - 4

புரட்சி பாரதம் - 1

டிவிவி தினகரனின் அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை

வாக்கு சதவிகிதம்:

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

திமுக - 37.70%

அதிமுக - 33.29%

காங்கிரஸ் - 4.27%

பாமக - 3.80%

பாஜக - 2.62%

சிபிஐ - 1.09%

சிபிஎம் - 0.85%

தேமுதிக - 0.43%

மற்றவை - 14.46%

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கடுமையான போட்டியை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு அளித்தார். இறுதியில் வானதி வெற்றி பெற்ற நிலையில் கமல் இரண்டாம் இடம் பிடித்தார்.

தனியாகவே களமாடிய நாம் தமிழர் கட்சிக்கு குறிப்பிடும் வகையில் எந்த தொகுதியிலும் கடும் போட்டியை அளிக்காவிட்டாலும் கூட பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்தது. அமமுக தரப்பில் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நெருக்கடி அளித்த போதிலும் வெற்றியை பெற முடியவில்லை.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் சீமான் 2வது இடத்துக்கு நெருங்கிய வாக்குகளை பெற்றார். அவர் ஒட்டுமொத்தமாக அத்தொகுதியில் 48,497 வாக்குகள் (24.3%) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Election Result, TN Assembly Election 2021