ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா, டெங்கு காய்ச்சல்: இரண்டுக்கு அறிகுறிகள் ஒன்றுதான் - வேறுபடுத்திப் பார்ப்பது எப்படி?

கொரோனா, டெங்கு காய்ச்சல்: இரண்டுக்கு அறிகுறிகள் ஒன்றுதான் - வேறுபடுத்திப் பார்ப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்புக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் இருக்கும் அறிகுறிகள் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் இருக்கும் அறிகுறிகள் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் இருக்கும் அறிகுறிகள் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இரண்டு நோய்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதால், கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

உலகையே ஆட்டிவைக்கும் கொரோனா பெருந்தொற்றால், குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூன்றாவது அலை ஏற்பட்டால், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் முதல்கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது, இரண்டுக்குமே காய்ச்சல், உடல் சோர்வு, வயிறு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்படும்.

அதேநேரம், டெங்குவில் காய்ச்சல் குறையும்போது, இந்த தடிப்புகள் தெரிய ஆரம்பிக்கும்.

கொசு கடித்தது போன்று புள்ளி, புள்ளியாக சிவப்பு நிறத்தில் தோன்றும்.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், பருக்கள் போன்று உடல் முழுவதும் தென்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், மூன்றாவது நாளில் காய்ச்சல் குறையத் தொடங்கும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண், மூக்கு ஆகியவற்றில் நீர் வெளியாகும் என்றும், கண்களில் சிவப்பு நிறம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு நோய்களையும் பிரித்தரிவது சவாலானது என்பதால், 3 நாட்களுக்கு பாதிப்பு தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர் சசிதரன் குறிப்பிடுகிறார்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின், பிளேட்லெட் ஆகியவற்றின் அளவை கணக்கிடும், அடிப்படை பரிசோதனைக்குப் பிறகு, மற்ற பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவரைப் பார்த்து, உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், அவர்களது அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

First published: