• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு... எதற்கெல்லாம் தடை?

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு... எதற்கெல்லாம் தடை?

மாதிரி படம்

மாதிரி படம்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழத்ததில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கில் தொடரும் தடைகள் 

    மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

    • மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

    • திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

    • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள்

    • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

    .நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    Also Read : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

    ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள்

    தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIs and Industrial Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து   பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து  பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    Also Read : 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழிகாட்டு நடைமுறைகள்

    கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

    கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

    கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: