ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்றால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்றால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

ஸ்டாலின் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

ஸ்டாலின் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நீதிபதிகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத உத்தரவிட கோரிய வழக்கு விசாரணையில் திராவிட மாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘மாடல்’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பினர். மேலும் அது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதி ஒத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, “தற்போது ‘திராவிட மாடல்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் என்ன?” என கேள்வி எழுப்பினர்.  மேலும், “இந்த முக்கியமான சொல்லாடலை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாமே” எனவும் கருத்து தெரிவித்தனர்.

First published:

Tags: Dravidam, High court, Tamil