Sasikala : ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் சசிகலா... அனல் பறக்கும் அடுத்த மூவ்!

சசிகலா

தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும்.

  • Share this:
    கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன் என்றும் தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன் எனவும் சசிகலா தொண்டர்களிடம் தெலைப் பேசியில் பேசுகையில் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட திட்டத்தையும் தெரிவித்துள்ளார்.

    சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதன்படி, சென்னையைச் சேர்ந்த புவனேந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால், மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் கவலைபட நான் இனி விடமாட்டேன். விரைவில் நான் வந்துவிடுவேன். கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன். தொண்டர்கள் துயையுடன் கட்சியை மீட்பேன். ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் செல்வேன். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும். கட்சியை நல்லபடியாக வழிநடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது தினந்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் நாள்தோறும் வெளியாகி அரசியலில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    Read More : தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

    இந்நிலையில், சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தாலும், அதிமுகவினர் அதனை கண்டுகொள்வதாக இல்லை. அதே நேரத்தில் பல இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    Must Read : மேகதாது அணை: கர்நாடக அரசின் போக்கை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல: அமைச்சர் துரைமுருகன்

    அதேசமயம் விளாத்திகுளம் உள்ளிட்ட சில இடங்களில் அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா தொண்டர்களிடம் பேசுகையில் பொதுவாக விரைவில் வந்துவிடுவேன் என்பதை தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: