• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில்களில் எதன் அடிப்படையில் யானை வளர்க்கப்படுகிறது? - உயர்நீதிமன்றம்

கோயில்களில் எதன் அடிப்படையில் யானை வளர்க்கப்படுகிறது? - உயர்நீதிமன்றம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோயில்களில் எந்த விதிப்படி வளர்க்கப்படுகிறது என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த ஆண்டனி கிளமென்ட் ரூபின், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மசினி யானையை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கினார். அந்த யானை பாகனை கடுமையாக தாக்கியது. சில மாதங்களுக்குப் பின் பரிசோதித்த போது மசினி மன அழுத்தத்துடன் இருந்தது தெரியவந்தது.


    இந்நிலையில், கடந்த மே 25 அன்று கோயில் வளாகத்தினுள் நின்றபோது யானைப்பாகனை தாக்கி கொன்றது. உடனடியாக மகளிகுடியிலுள்ள உச்சினி காளியம்மன் கோயிலுக்கு மசினி யானை மாற்றப்பட்டது. மேலும் யானை இயல்பான நிலையில் இல்லை. மசினியை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். அனைத்து யானைகளையும் வணிக நோக்கத்தில் பயன்படுத்தாமல், சுதந்திரமாக வாழவும், தேவையான சிகிச்சைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
    மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசுத்தரப்பில், ‘வேப்பேரி கால்நடை ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் மூலம் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. யானை முறையாக பராமரிக்கப்படுகிறது’ என்றும் கூறப்பட்டது.

    இதையடுத்து, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோயில்களில் எந்த விதிகளின் அடிப்படையில் வளர்க்கப்படுகிறது. இதற்கென உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்து அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: