ரெட் அலெர்ட் என்றால் என்ன...? வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எச்சரிக்கை நிறங்கள் என்னென்ன?

ரெட் அலெர்ட் என்றால் என்ன...? வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எச்சரிக்கை நிறங்கள் என்னென்ன?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 21, 2019, 4:14 PM IST
  • Share this:
இயற்கை பேரிடரை பொறுத்தவரை வானிலை ஆய்வு மையம் அரசு மற்றும் மக்களுக்கு 4 நிறங்களிலான வண்ணங்களில் எச்சரிக்கையை விடுகிறது.

பொதுவாக, வானிலை மையம், 24 மணி நேரம், 48 மணி நேரம் என குறுகிய கால எச்சரிக்கைகளையும். ஒரு வாரம் முதல் ஒரு மாதகாலம் வரையிலான நீண்ட கால வானிலை கணிப்புகளையும் வெளியிடுகிறது.

வானிலை தொடர்பாக அரசு நிர்வாகங்களுக்கு நான்கு நிறங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது


வானிலை மையம், அரசுக்கு பச்சை நிற எச்சரிக்கை விடுத்தால், மோசமான வானிலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்றும் பொருள்படும். மஞ்சள் நிறமாக இருந்தால், வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என பொருள்.

ஆரஞ்சு நிறமாக இருந்தால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என பொருள்படும்.

வானிலை ஆய்வு மையம், சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்தால், மிகக் கன மழை பெய்யக்கூடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்கவேண்டும் என்பதை குறிக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது சிவப்பு எச்சரிக்கை .இதுதவிர, ஐந்துவித பொது முன்னறிவிப்புகளை, வானிலை மையம், பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது.

இடி மற்றும் மின்னலுக்கு வாய்ப்பே இல்லை என்பதை நீல நிற எச்சரிக்கை குறிக்கிறது.

பச்சை நிறம், மிதமான இடி, மின்னலுடன் பலத்த மழைக்கான எச்சரிக்கையை குறிப்பதாகும்

இளம் ஊதா நிறத்தை பொறுத்தவரை, பலத்த மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனப் பொருள்.

வானிலை மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தால் இடி மற்றும் மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும்

இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிகக் கனமழை அபாயம் இருந்தால் சிவப்பு நிற முன்னறிவிப்பு வெளியிடப்படும்.

Also See...

First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்