கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

    இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. ஆனால் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்கு குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி,

    தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping)           இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

    மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.

    மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.•

    வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.  மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

    வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.• கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.•

    மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.

    நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் எவை இயங்கும்:

    1. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    2. அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

    3. வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    4. கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    5. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    6. மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    7. டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    8. செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    9. கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    10. மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    11. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

    12. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

    13. தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    14. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.

    15. தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

    16. வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக மேல்குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் தவிர்த்து மற்றவை எதற்கும் இந்த ஊரடங்கில் அனுமதி கிடையாது
    Published by:Vijay R
    First published: