• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பல்கலைக்கழங்களில் இருக்கை என்றால் என்ன? அதன் பயன் என்ன?

பல்கலைக்கழங்களில் இருக்கை என்றால் என்ன? அதன் பயன் என்ன?

பல்கலைக்கழங்களில் இருக்கை

பல்கலைக்கழங்களில் இருக்கை

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமரிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழங்களில் இருக்கை என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்.

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது மொழிக்கென தனித்துறைகள் இருக்கும். இதில் இருக்கை என்பது வித்தியாசமானது. ஒரு துறையுடன் இது இணைக்கப்பட்டிருக்கும் என்றாலும், அதற்கென தனித்த அடையாளமும், உயர் கவுரவத்தையும் பெற்றிருக்கும். ஒரு மொழிக்கான இருக்கையில், அந்த மொழியை பிரத்யேகமாக கற்பிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் என ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார்.

    இந்த பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும். இதுபோன்ற இருக்கைகள், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் அமைக்கப்படுவதன் மூலம் மொழியின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, அந்த மொழி தொடர்பான ஆய்வையும் மேற்கொள்ள முடியும்.

    Also Read : தமிழ்நாட்டில் பாரதியாருக்கு உரிய கௌரவம் கிடைக்க வேண்டும் - சத்குரு வேண்டுகோள்

    உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பெயரிலும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. தற்போது உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமரிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    1916ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், 20 ஆயிரம் மாணவர்கள் தங்கிப்படிக்கும் வசதியுடன் மிகப் பெரிய வளாகத்தை கொண்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், ஆறு கல்விநிறுவனங்களும், 140 துறைகளும் உள்ளன. தற்போது அங்கு தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படுவது தமிழ் மொழியின் மணிமகுடத்தில் மற்றொரு கல் பதித்தது போன்றதாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: