Home /News /tamil-nadu /

360 டிகிரி எப்புடி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

360 டிகிரி எப்புடி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

பழனிவேல் தியாகராஜன் - அண்ணாமலை

பழனிவேல் தியாகராஜன் - அண்ணாமலை

முதல்வர் மு.க.ஸ்டாலினும் நானும் கொள்கையில் 360 டிகிரி என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வரவேற்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு, பாஜக சார்பில் விமான நிலைய வளாகத்தில் மேள, தாளங்கள் முழங்க பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். அப்போது பிரதமர் மோடி முன் கச்சத்தீவை மீட்பது, நீட் விலக்கு, ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குவது குறித்து பேசியிருந்தார். மேலும் திமுக ஆட்சயின் திராவிட மாடல் தொடர்பாகவும் ஸ்டாலின் பேசியிருந்தார்.

    முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையா விமர்சனம் செய்து இருந்தார். பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்துள்ளார். இது நாகரீகம் அற்ற செயல். தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள் . 360 டிகிரி நாங்கள் திமுக எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான் மரியாதையை கொடுக்காமல் இருக்க மாட்டோம் என்று தெரிவித்து இருந்தார்.

    Also Read : தமிழகம் பிரதமர் மோடியை விரும்புகிறது - அமித் ஷா தமிழில் ட்வீட்

    பாஜக தலைவர் அண்ணாமலையின் நானும் முதல்வரும் 360 டிகிரி போல என்ற கருத்து தான் தற்போது பேச்சுபொருளாகி உள்ளது. ஏனென்றால் 180 டிகிரி தான் நேர் எதிர்மறை ஆகும். 360 என்றால் இருவரும் இணைந்து ஒத்துப்போகும் நிலை. அதாவது முதல்வரும் நானும் ஒரே கருத்துக்களை கொண்டவர்கள் போல் என்றாகி விடும்.



    இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்த்தில் 60 டிகிரி முதல் ஆரம்பித்து 360 டிகிரி வரை எப்படி இருக்கும் என்று படம் போட்டு பாடம் எடுத்துள்ளார். நிதி அமைச்சரின் இந்த பதிவுக்கு பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோட்டையை நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, BJP, DMK, Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி