Home /News /tamil-nadu /

பாஜகவிற்கும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும் என்ன தொடர்பு? தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தது எதற்கு?

பாஜகவிற்கும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும் என்ன தொடர்பு? தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தது எதற்கு?

பாஜகவிற்கும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும் என்ன தொடர்பு? பாஜகவுக்கு தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தது எதற்கு? என்று கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவிற்கும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும் என்ன தொடர்பு? பாஜகவுக்கு தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தது எதற்கு? என்று கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவிற்கும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும் என்ன தொடர்பு? பாஜகவுக்கு தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தது எதற்கு? என்று கேள்வி எழுந்துள்ளது.

    பாஜக-வுக்கு தேர்தல் நிதியாக கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் 100 கோடி ரூபாயை வழங்கியுள்ள தகவல் வெளியான நிலையில், பாஜக - மார்ட்டின் இடையிலான உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 2020-21ஆம் நிதியாண்டில் அனைத்துக் கட்சிகளும் சேர்த்து தேர்தல் நிதியாக 245 கோடியே 72 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதில், 209 கோடி ரூபாய் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி 19 பெரு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள நிலையில், இந்த 209 கோடி ரூபாய் நிதியில், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் மட்டும் 100 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். இந்த நிதியை அவருக்கு சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, லாட்டரி அதிபர் மார்டினுக்கும் பாஜகவிற்கும் இடையிலான உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதைக் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறை சென்றதையும் அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.  இத்தகைய சூழலில், பாஜக-விற்கு தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை மார்டின் வழங்கியுள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    இதற்கு பிரதிபலனாக மோடி அரசு அவருக்கு என்ன செய்ய உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ள கே.எஸ்.அழகிரி,  இது குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

    இதனிடையே, பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கோபண்ணா, இவ்வளவு நிதியை கொடுத்திருப்பதில் ஏதோ காரணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய நபர், பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்திருப்பதாலேயே, தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

    Also read: தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி