கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார்?: முதலமைச்சர் கேள்வி

கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார்?: முதலமைச்சர் கேள்வி

எடப்பாடி பழனிசாமி

கிராம சபை கூட்டம் நடத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

  இதில், முதல்நாளில் பவானியில் பரப்புரை தொடங்கிய முதலமைச்சர், தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் எனில் அதிமுகவுக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை பட்டியலிட்ட முதலமைச்சர், புகாரில் சிக்கி இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதே கடினம் என்றார்.

  தேர்தலுக்காக மக்களை கவரும் நோக்கில் திமுகவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பார்கள் என்று முதலமைச்சர் கூறினார். ஆனால், எதையும் செய்ய மாட்டார்கள் என்றும் விமர்சித்தார். நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் சாடினார்.

  சத்தியமங்கலத்தில் முதலமைச்சர் பழனிசாமி திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பாஞ்சயத்து உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்ததாக குற்றம் சாட்டினார். அப்போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததை அறிந்த முதலமைச்சர், பொதுமக்கள் விலகி அதற்கு வழி விடுமாறு கேட்டுக்கொண்டார்.

  மேலும் படிக்க...பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சில கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்

  ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, இரண்டாவது நாளாக இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: