TN Budget 2021 | பட்ஜெட்டில் தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு என்ன?

மாதிரி படம்

சில தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. 30 சதவீத கட்டணத்தை கூட மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க இயலவில்லை என தனியார் கல்வி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

  • Share this:
    தமிழகத்தில் தற்போது வரை திறக்கப்படாத பள்ளிகளுக்கு சொத்து வரி விதிப்பதிலும், இயக்கப்படாத பள்ளி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் பொருளாதார நெருக்கடியால் மாணவர்களின் பெற்றோர்களால் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்த இயலவில்லை. கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்று தமிழக அரசும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் தத்தளிப்பதாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Also Read: ஓ.எம்.ஆரில் உள்ள 4 டோல்கேட் நீக்க அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா?

    மாணவர்களிடம் 75 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் 30 சதவீத கட்டணத்தை கூட மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க இயலவில்லை என தனியார் கல்வி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பெற்றோரையும் நிர்பந்திக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

    தனியார் பள்ளி கூட்டமைப்பினர் எதிர்பார்ப்பு:

    தனியார் பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட போதிலும் சொத்து வரி தொடர்ந்து வசூலிப்பதாக கூறும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், அதில் விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். மேலும் ஓன்றரை ஆண்டாக இயக்கப்படாத தனியார் பள்ளி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதிலும், காப்பீட்டு தொகை செலுத்துவதிலும் சலுகை அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதேபோன்று மின்கட்டணத்தில் சலுகை அறிவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீத ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    Also Read:  காந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்: ஆப்கனின் 2வது பெரிய நகரும் வீழ்ந்தது!

    சில தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததால், பல ஆசிரியர்கள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதியும், தனியார் பள்ளி நிர்வாகத்தின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களுக்கு 50 சதவீத ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்னர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கலில் தனியார் பள்ளிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் அறிவிப்புகள் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

    செய்தியாளர் ரவிக்குமார்
    Published by:Arun
    First published: