சென்னையில் கொரோனாவுக்கு இடையே டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுகிறது

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா தவிர டெங்கு , மலேரியா உள்ளிட்ட மற்ற நோய்களும் வர தொடங்கியுள்ளன. சில நோய்களுக்கு கொரோனா போன்ற அறிகுறிகள் இருப்பதால், எப்போது கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த செய்தியில் தெரிந்துக் கொள்ளலாம். 

சென்னையில் கொரோனாவுக்கு இடையே டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுகிறது
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 9:22 AM IST
  • Share this:
மழைக்காலத்தில் கொசு மூலமாக உருவாகும் டெங்கு காய்ச்சல், தற்போது சென்னையில் பரவ தொடங்கியுள்ளது. கொரோனாவை போல், டெங்கு நோயாளிகளுக்கு தொண்டை எரிச்சல், சளி இருக்காது. இடைவிடாத அதிக வெப்ப நிலையுடன் காய்ச்சல், பின் தலையில் வலி, தட்டணுக்கள் குறைவதால் ஆங்காங்கே தோலில் சிவப்பு திட்டுகள் வெளிப்படும். டெங்குவை போல் மலேரியாவுக்கும் காய்ச்சல் ஏற்படும். அடிக்கடி காய்ச்சல் வந்துபோனாலும், காய்ச்சல் வந்து போன சுவடே தெரியாமல் சிறிது நேரத்தில் அதீத வியர்வை ஏற்பட்டால் அது மலேரியாவுக்கான அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண சளி காய்ச்சல் ஏற்பட்டால், 99 டிகிரி என்ற அளவில் மிதமான காய்ச்சல் இருக்கும். சளி, தொண்டை எரிச்சல் இருக்கும். கூடவே கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வழிதலும் இருக்கும். இருப்பினும் ஆக்சிஜன் அளவு குறையாது. இதை தவிர எலி காய்ச்சல், டைபாய்ட், மழைக்காலத்தில் செடிகளில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்றவையும் வரும் நாட்களில் பரவக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா மற்றும் டெங்கு இரண்டு நோயாலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் நோயாளிகள் வரத் தொடங்கியுள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருந்தியல் பிரிவு பேராசிரியர் நளினி தெரிவிக்கிறார். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி நல்வாய்ப்பாக பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும், இருப்பினும், கொரோனாவோடு மற்ற நோய்கள் ஏற்படும்போது, பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்றும் கூறுகிறார்.


மேலும் படிக்க...கர்நாடகாவில் கோரவிபத்து: பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழப்புஎனவே எந்த காய்ச்சலாக இருந்தாலும் சுய சிகிச்சை எடுத்துக் கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading