ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு- புதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன?

100 பேர் வரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு- புதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன?
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 7:35 PM IST
  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து, தற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், புதிய சில தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள் :

உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.


திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளில் உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 100 நபர்கள் வரை கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

தற்போது தினந்தோறும் வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது 100 விமானங்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.

அரசு, அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.தொடரும் தடைகள்:

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்

தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்களுமின்ற ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும்

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பூங்காங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுக்குத் தடை தொடரும்

மத்திய அரசு அனுமதித்துள்ள வழித் தடைகளைத் தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்

மதம் சார்ந்த, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த தடை நீடிக்கும்
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading