நெடுஞ்சாலை துறையில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 17 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ளார். 

  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு திட்டங்களை அறிவித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு,

மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் தாலுகா இடங்களை இணைக்கும் 2,200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து தெறிவின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் நான்கு வழித்தட சாலைகளாகவும், 1700 கிலோ மீட்டர் சாலைகள் இரண்டு வழித்தட சாலைகளாகவும் ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாலை மேம்பாட்டு திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்படும்.

முதற்கட்டமாக போக்குவரத்து பாதிப்பு அதிகமுள்ள 250 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 2000 கோடி மதிப்பில் 4 வழித்தட சாலைகளாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள 600 கிலோ மீட்டர் சாலைகள் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருவழி சாலைகளாகவும் அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில் தேவை இருப்பின் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு, மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடைபாதைகளுடன் கூடிய வடிகால்கள் கட்டப்படும். இதற்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

Also read: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்!

நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள 1281 பழைய திரைப்பாலங்களை 2,401 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 648 தலங்கள் உயர்மட்ட படங்களாக மாற்ற 609 கோடி மதிப்பில் கட்டப்படும்.

அறந்தாங்கி, திருச்சி, ஆலங்குடி, மயிலாடுதுறை, முசிறி, வெள்ளக்கோயில், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கரூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை மற்றும் புதிய இணைப்புச் சாலை பணிகள் செயல்படுத்தப்படும்.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைபாக்கம் கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்.

சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட இதர சாலைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக, 2000 கிலோ மீட்டர் நீள சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக மதுரையை சுற்றி சாலையில் ஒருகிலோ மீட்டர் நீளமான சுரங்கப்பாதை 200 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள சிறுதுறைமுகங்களில் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட கடலூர் துறைமுகத்தில் கட்டுமானங்களை பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர கப்பல்களின் மூலம் தமிழகத்தின் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு தேவையான சரக்குகள் ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கையாளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: