• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி. வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்ன? குற்றச்சாட்டுகள் என்ன, FIR என்ன சொல்கிறது?

எஸ்.பி. வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்ன? குற்றச்சாட்டுகள் என்ன, FIR என்ன சொல்கிறது?

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

2014 முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டென்டர்களும் SP வேலுமணி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானது.

  • Share this:
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 7 நபர்கள், 10 நிறுவனங்கள் என மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது.

120பி, 420, 409 IPC, 109 உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பிரிவுகள் அரசாங்க பொறுப்பில் உள்ளோர் ஊழல் செய்தல், ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கானவை.

மேலும் , 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு ஓர் உறவினருடன் சேர்ந்து தனது சொந்த நிறுவனத்தை துவங்கி கோவை மாநகராட்சி டென்டர்களை வாங்கிவந்துள்ளார். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார், ஆனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவரது சகோதரர் அன்பரசன் நடத்தி வந்ததாக FIR கூறுகிறது.

Also read:  விட்டுவிடுங்கள் என கெஞ்சிய மாற்றுத்திறனாளி நபரை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்த போலீசார்!

2014 ஆம் ஆண்டில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றபின் , தனது அதிகாரத்தை பயன்படுத்தி,  அவர் மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பல டென்டர்களை கொடுத்து வந்துள்ளார். 462.02 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மாநகராட்சி டென்டர், 346.81 கோடி ரூபாய்க்கான கோவை மாநகராட்சி பணிகளுக்கான அரசு டென்டர் என மொத்தமாக 810 கோடி ரூபாய்க்கான டெண்டர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களும் நண்பர்களும் நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read:  கஜகஸ்தான் வீரரிடம் கடிவாங்கிய அனுபவத்தை பகிர்ந்த ரவிக்குமார் தாஹியா.. வலியை தாங்கிய வெற்றி வீரன்..

மேலும், கான்ட்டாக்டுகளை தான் சார்ந்த நிறுவனங்களுக்கு கொடுக்க, டெண்டர் மேசடியிலும் வேலுமணி ஈடுபட்டுள்ளார்.

FIRல் குறிப்பிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களின் மொத்த லாபம் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்துள்ளதும் FIRல் கூறப்பட்டுள்ளது.

அசுர வேக வளர்ச்சி - குறுகிய காலத்தில் எஸ்.பி. வேலுமணியை சார்ந்த நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

நிறுவனங்களின் வளர்ச்சி


FIR


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி, 2014 முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டென்டர்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: