• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடியரசுத் தலைவர், அளுநர் இருக்கை அருகே இடம் ஒதுக்கினோம்- அதிமுக செய்தது நியாயமில்லை!

குடியரசுத் தலைவர், அளுநர் இருக்கை அருகே இடம் ஒதுக்கினோம்- அதிமுக செய்தது நியாயமில்லை!

கருணாநிதி படத் திறப்பு விழா

கருணாநிதி படத் திறப்பு விழா

முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தானே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாக குறிப்பிட்ட துரைமுருகன், விழாவில் அதிமுகவின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கலைஞர் உருவ பட திறப்பு விழாவை அதிமுகவினர் புறக்கணித்ததற்கான காரணம் நியாயமானவை அல்ல என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருணாநிதியின் படத்தை திறந்து வைத்தார்.இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது.  ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை திமுக புறக்கணித்ததால் தாங்கள் கருணாநிதி படத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கருணாநிதி உருவ பட திறப்பு விழாவிற்கும், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈஸ்ட் இந்தியா போல நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல் விமர்சனம்!




    முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தானே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும்   கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தன்னிடம் பதில் தெரிவிக்காமல், சட்டமன்ற செயலாளரிடம் நாங்கள் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என தெரிவித்துவிட்டார் என்றும்  கூறினார்.

    மேலும் படிக்க: தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!


    குடியரசுத் தலைவர், ஆளுநர்  அமர்ந்திருக்கும் வரிசையில்  அவர்கள்  இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவருக்கு  இருக்கை ஒதுக்கப்பட்டு, வாழ்த்துரை வழங்கவும் இடம் அளித்து கவுரவிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஜெயலலிதா உருவ படத் திறப்பிற்கு திமுகவினர் வராததால்  கருணாநிதி படத்திறப்பு விழாவிற்கு நாங்கள் வர மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் துரைமுருகன் கூறினார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: