ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சசிகலா மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விளக்கம் கேட்டு போலீஸுக்கு கோர்ட் உத்தரவு

சசிகலா மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விளக்கம் கேட்டு போலீஸுக்கு கோர்ட் உத்தரவு

Sasikala : சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருகிற 20ஆம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா பேசி வருவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சசிகலா மீது ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல் துறைக்கு அறிவுறுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும்

தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனு தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Must Read : வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

இந்த வழக்கை இன்று விசாரித்த சைதாப்பேட்டை 17வது நீதித்துறை நடுவர் கிருஷ்ணன், அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வருகிற 20ஆம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Read More : பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை 2 மடங்கு அதிகரிப்பு

First published:

Tags: ADMK, Sasikala