முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு: அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு: அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா சொல்வது என்ன? இதன் மூலம் அரசுப் பணி நியமனத்தில் என்ன மாற்றம் நிகழும்.

  • Last Updated :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்கும் பணி நியமனங்கள் மட்டுமின்றி, தமிழக அரசின் அனைத்து பணி நியமனங்களிலும் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது இந்த இட ஒதுக்கீட்டு முறை.

ஆனால், முன்பிருந்த விதிமுறைப்படி, இந்த இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற, குறிப்பிட்ட பணிக்கான தகுதிப் படிப்பு எதுவோ அதை மட்டும் தமிழ்வழியில் படித்திருந்தால் போதுமானது. உதாரணமாக, குரூப் 1 தேர்வுக்கு தகுதியான பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும்.

தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, தகுதிப்படிப்புகள் அத்தனையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டியது கட்டாயம். உதாரணமாக குரூப் 1 தேர்வை எழுத 10 + 2 + 3 எனப்படும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, 3 ஆண்டு பட்டப்படிப்பு ஆகிய அனைத்தையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டியது அவசியம்.

பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்புகளை ஆங்கில வழியில் படித்தவர்கள், தமிழ் வழியில் ஒரு பட்டப்படிப்பை மட்டும் தொலைநிலைக் கல்வி முறையில் படித்துவிட்டு தமிழ் வழி படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பயன்பெறுவதாக தொடர் புகார்கள் வந்தன. எனவே, இந்த மாற்றத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை பல் கல்லூரிகள் தமிழ் வழியில் வழங்குகின்றன.

First published:

Tags: Tamil student